கோவில் வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்ட மளிகைக்கடை ஊழியர்: கள்ளக்காதலி உள்பட மூவர் கைது!

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

கோவில் வளாகத்தில் மளிகை கடை ஊழியர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மளிகை கடை ஊழியர் கண்ணதாசன் என்பவர் கடந்த 12ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் காணாமல் போன கண்ணதாசனை தேடிவந்தனர்

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் பண்ருட்டியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் மளிகை கடை ஊழியர் கண்ணதாசனை கொலை செய்து கோவில் வளாகத்தில் புதைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. லிங்கா ரெட்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொலை செய்து ஜோதிடர் கோபிநாத் என்பவர் புதைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது

இதனை அடுத்து கோயில் வளாகத்தில் உள்ள கண்ணதாசனின் பிணத்தை போலீசார் தோண்டி எடுத்தனர். இந்த வழக்கில் ஜோதிடர் கோபிநாத் மற்றும் அவரது நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மூவரிடமும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மளிகை கடை ஊழியர் ஒருவரை கொலை செய்த கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது