தஞ்சை பெரியகோவிலைக் கட்டியது 30 அடி மனிதர்களா? ஆச்சர்யமூட்டும் ஆடியோ விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை பறைச்சாற்றும் ஒரு பிரம்மாண்டம்தான் தஞ்சை பெரிய கோவில். ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலின் கட்டுமானம் இன்னும் பிடிபடாத ஒரு ரகசியமாகவே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அதன் கட்டிட அமைப்புகளும் கோபுரத்தில் வைக்கப்பட்டு உள்ள 80 டன் ஒற்றைக் கல்லும் கோவின் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட விதத்தை குறித்து இன்றைக்கும் கட்டிடக்கலை நிபுணர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பம் வளராத அந்தக் காலக்கட்டத்தில் ஒரு கல்லின் மீது இன்னொரு கல்லை எப்படி அடுக்கி இருப்பார்கள், அதுவும் கோபுரத்தின் மீது இருக்கும் ஒற்றைக் கல்லை தாங்கிப் பிடிக்கும் கட்டுமானத்தை எப்படி தெரிந்து கொண்டு இருப்பார்கள் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தற்போது வியப்பையே ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து கோவில் அளவிற்கு மணல்மேட்டை உருவாக்கி அந்த மணல் மேட்டின் வழியாகவே இத்தனை கட்டடிட வேலைகளையும் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு பொதுவான வரலாறு கூறப்படுகிறது.
நிரூபிக்கப்படாத இந்த வரலாற்றைக் குறித்து பல ஆய்வுகள் இன்றைக்கும் நடந்து வருகின்றன. இந்நிலையில் 30 அடி மனிதர்கள்தான் இந்தக் கட்டுமானத்தை உருவாக்கினார்கள், அதுவும் இந்த மனிதர்கள் வெறுமனே சத்தத்தை எழுப்பி அந்த சத்தத்தை வைத்துக் கொண்டு தனாகவே கல்லை மேலே ஏற்றினார்கள், அதோடு ராஜராஜசோழன் படையில் எந்திர மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள் என்பது போன்ற பல்வேறு கருதுகோளை முன்வைத்து ஒரு ஆய்வுக்குழு பேசி வருகிறது.
அந்த வகையில் ORTP ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் கபிலன் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானம் குறித்து அவர் முன்வைக்கும் கருத்துகளை விரிவாக கூறி நமக்கு ஆடியோ விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் தற்போது Vaarta ஆப்பில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோவில் டாக்டர் கபிலன் கூறியிருக்கும் ஏலியன் தொழில்நுட்பம், தற்போதையே டெஸ்லா தொழில்நுட்பம் போன்றவற்றை சித்தர்களின் மந்திரத்தோடு பொருத்தி வைத்து விளக்கம் அளிக்கிறார்.
மேலும் சித்தர்களிடம் அனைத்துத் தொழில் நுட்பங்களும் சாத்தியமாகி இருந்தன. அந்த தொழில்நுட்பத்தால் தஞ்சை பெரிய கோவில் எனும் பிரம்மாண்டம் உருவாகி இருக்கிறது என விளக்கம் அளித்து உள்ளார். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்த இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments