தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய கோள்… பூமியை நோக்கி வருவதால் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Wednesday,July 21 2021]
தாஜ்மஹாலின் அளவைவிட 3 மடங்கு பெரிய அளவுள்ள, சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி அதிகவேகமாக வந்து கொண்டு இருக்கிறது. இந்த கோள் வரும் 24 ஆம் தேதி பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.
கோள்கள் உருவாக்கத்தில் இருந்து எஞ்சியவற்றை விஞ்ஞானிகள் சிறிய கோள் என அழைக்கின்றனர். இந்த சிறிய கோள்கள் சூரியக் குடும்பத்திற்குள் எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும். அந்த வகையிலான சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி 18,000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டு இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.
2008 Go20 எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்தக் கோளானது இந்திய நேரப்படி வரும் 24ஆம் தேதி நள்ளிரவு சரியாக 1 மணிக்கு பூமியைக் கடந்து செல்லும் என்றும் இது கடந்து செல்லும்போது பூமிக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நாசா விண்வெளி அமைப்பு தகவல் தெரிவித்து உள்ளது. இருப்பினும் இந்தக் கோளின் நகர்வினை நாசா அமைப்பு மிக நுணுக்கமாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.