தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய கோள்… பூமியை நோக்கி வருவதால் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

தாஜ்மஹாலின் அளவைவிட 3 மடங்கு பெரிய அளவுள்ள, சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி அதிகவேகமாக வந்து கொண்டு இருக்கிறது. இந்த கோள் வரும் 24 ஆம் தேதி பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.

கோள்கள் உருவாக்கத்தில் இருந்து எஞ்சியவற்றை விஞ்ஞானிகள் சிறிய கோள் என அழைக்கின்றனர். இந்த சிறிய கோள்கள் சூரியக் குடும்பத்திற்குள் எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும். அந்த வகையிலான சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி 18,000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டு இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.

2008 Go20 எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்தக் கோளானது இந்திய நேரப்படி வரும் 24ஆம் தேதி நள்ளிரவு சரியாக 1 மணிக்கு பூமியைக் கடந்து செல்லும் என்றும் இது கடந்து செல்லும்போது பூமிக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நாசா விண்வெளி அமைப்பு தகவல் தெரிவித்து உள்ளது. இருப்பினும் இந்தக் கோளின் நகர்வினை நாசா அமைப்பு மிக நுணுக்கமாக கவனித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த்-தேசிங்கு பெரியசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்: டைட்டில் இதுதான்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சன்னி லியோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

 செல்ல மகளுக்குப் பிறந்தநாள்… தடுப்பூசியை இலவசமாகக் கொடுத்த பிரபல நடிகர்!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் மகேஷ் பாபு தனது செல்ல மகளின் 9 ஆவது பிறந்த தினத்தை நேற்று ஆக்கப்பூர்வமாக கொண்டாடியுள்ளார்

விவகாரத்து கேட்டு வந்த பெண்...! பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டும் வக்கீல்....!

விவாகரத்து கேட்டுவந்த அப்பாவி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டியுள்ளான் வழக்கறிஞர்.

ரம்யா கிருஷ்ணனின் வேற லெவல் சந்தோஷம்: கடுப்பான வனிதா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் வெளியாகி நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்தோம்.