ஆணுறை வாங்கி வர முடியாது என்றதால் படத்தில் இருந்து நீக்கம்.. தமிழ் ஹீரோ மீது உதவி இயக்குனரின் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Thursday,August 22 2024]

தமிழ் திரையுலகின் ஹீரோ ஒருவர் ஆணுறை வாங்கி வரச் சொன்னதாகவும், முடியாது என்று சொன்னதால் தன்னை படத்திலிருந்து தூக்கி விட்டதாகவும், உதவி இயக்குனர் ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் ஹீரோக்களில் ஒருவர் நகுல் என்பதும் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு ’காதலில் விழுந்தேன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.

இந்த நிலையில் நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த துணை இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நகுல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தன்னிடம் மூன்று ஆணுறைகளை வாங்கி வரும்படி நகுல் கூறியதாகவும் தனக்கு வேலை இருப்பதால் இப்போது முடியாது என்று கூறியும் எனக்கு நகுல் அழுத்தம் கொடுத்ததாகவும் அதற்கு நான் மறுக்கவே என்னை படத்தில் இருந்து நகுல் தூக்கி விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் பணிபுரிந்ததற்காக இரண்டு வருட சம்பளம் தனக்கு வரவில்லை என்றும் படத்தின் டைட்டிலில் கூட எனது பெயரும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

அது மட்டும் இன்றி இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகை என்றும் அவர் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதால் அவரை படத்திலிருந்து நகுல் தூக்கி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

மாரி செல்வராஜின் 'வாழை' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் விமர்சனம்.. என்ன சொல்லி இருக்கிறார்?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில்

இன்று கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்..  அதற்கு முன் தவெகவின் உறுதிமொழி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

'படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கிறேன்': பிக்பாஸ் நடிகை

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவரை செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறியிருக்கின்றேன் என  பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் 'கோட்' திரைப்படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்? வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

ரசனைக் குறைபாடுள்ளவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை.. கமல்ஹாசன்

சூரி நடித்த 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து