இதுதான் விஜய் பட டைட்டிலா? இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படமான 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கும் நாளை அதிகாலை 12 மணிக்கும் செகண்ட் லுக்கும் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இன்னும் ஏழு மணி நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்றுமுன் விஜய் பட டைட்டிலுடன் கூடிய ஒரு போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் 'தளபதி 63' படத்தின் டைட்டில் 'அசால்ட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 'தளபதி 63' படத்தின் டைட்டில் இதுவரை கேள்விப்படாத, டிக்சனரியிலேயே இல்லாத வார்த்தையாக இருக்கும் என பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில் 'அசால்ட்' என்ற டைட்டில் போஸ்டரை பார்த்து விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

வரும் தீபாவளி திருநாள் அன்று வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது

More News

'விவிவி' கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி

விஜய்சேதுபதி கதை வசனம் எழுதும் ஒரு படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் யுவன்ஷங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாகவும்

தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட்டில் விஷால் மனு!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக பதிவாளர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

விஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சஞ்சீவி என்பவர் இயக்கவுள்ளார்

சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்!

சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் தரும் அனைத்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் வறண்டுவிட்டது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கமல் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

குஜராத்தில் நரேந்திரமோடி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது அபாரமான வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.