அசாமில் கடும் நிலநடுக்கம்… இந்தியாவில் மேலும் ஒரு அதிர்ச்சி!
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருந்தது என்றும் பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கம் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இன்று காலை 7.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவராத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே சிக்கிம் மாநிலத்தின் காங்டாக்கில் இதேபோன்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இதனால் இரண்டு நிலநடுக்கத்திற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பீதியைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தின் தேஜ்பூரில் இருந்து கிட்டத்தட்ட 43 கிலோமீட்டர் தொலைவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் அசாமைத் தவிர மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிக்கிமில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இந்த தாக்கத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
Few early pictures of damage in Guwahati. pic.twitter.com/lTIGwBKIPV
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 28, 2021