3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்!
- IndiaGlitz, [Monday,June 14 2021]
நடிகை அசின் தனது 3 வயது மகளுக்கு பாரம்பரிய கலையை கற்றுத் தந்துள்ள தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அசின், அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமல்ஹாசன் உடன் தசாவதாரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்தநிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்ட அசினுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது மகளின் புகைப்படத்தை பதிவு செய்து வரும் அசின், மூன்று வயதான மகளுக்கு கதக் நடனத்தை கற்றுத்தரும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அசினின் சொந்த மாநிலமான கேரளாவின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கதக் நடனத்தை மூன்று வயதிலேயே அசின் தனது மகளுக்கு கற்றுக் கொடுக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.