தொழில் சரிவை சரிகட்ட அசின் கணவரின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகிய அசினுக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது

இந்த நிலையில் அசின் கணவர் ராகுல் சர்மாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 4 வருடங்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 93 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

குறைந்த விலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சப்ளை செய்து வரும் சீன நிறுவனங்களோடு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள் போட்டி போட முடியவில்லை. இதனால் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் வெளியேறி வருவதால் பங்குச்சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தனது நிறுவனத்தின் சரிவை சரிக்கட்ட ராகுல் ஷர்மா புதியதாக எலக்ட்ரிக் பைக் உற்பத்தி துறையில் களமிறங்குகிறார். இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் அவரது நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.