ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு… Ind VS Pak போட்டிகள் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
6 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கே நடைபெற இருக்கிறது என்பது குறித்து நீண்ட நாட்களாக இழுபறி நிலவி வந்த நிலையில் பாகிஸ்தானில் 4 போட்டிகளிலும் மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெற இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஆசிய அளவில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகளில் இருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப் பெற்று இறுதியில் தேர்வாகும் இரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடத்தப்படும்.
2023 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிசிசிஐ பாகிஸ்தான் நாட்டில் பங்கேற்று விளையாட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஹைபிரிட் முறையில் போட்டிகளை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப் மற்றும் பிசிசிஐ செயல் தலைவர் ஜெய் ஷா இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
இதையடுத்து பாகிஸ்தானில் 4 போட்டிகள் மட்டுமே நடத்தப்படும் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த முழு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட இந்த அட்டவணையில் பாகிஸ்தான் நாட்டில் 4 போட்டிகளும் மீதமுள்ள போட்டிகள் இலங்கையிலும் நடைபெற இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஏ அணியிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் பி அணியிலும் விளையா இருக்கின்றனர்.
மேலும் பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நோபள் அகிய இரு அணிகளுக்கு இடையே போட்டிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அடுத்து ஆஃப்கானிஸ்தான் – வங்கதேசம், வங்கதேசம்- இலங்கை, இலங்கை- ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளும் பாகிஸ்தானிலேயே நடைபெற இருக்கின்றன.
இதையடுத்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கை கண்டி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற இருக்கிறது. வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆசியக்கோப்பை 2023 முழு அட்டவணை
ஆகஸ்ட் 30- பாகிஸ்தான் VS நேபாளம் – முல்தான் மைதானம்
ஆகஸ்ட் 31 – பங்களாதேஷ் VS இலங்கை – கண்டி மைதானம்
செப்டம்பர் 1 – இடைவேளை
செப்டம்பர் 2 –பாகிஸ்தான் VS இந்தியா – கண்டி
செப்டம்பர் 3 – பங்களாதேஷ் VS ஆப்கானிஸ்தான் – லாகூர்
செப்டம்பர் 4 – இந்தியா VS நேபாளம் –கண்டி
செப்டம்பர் 5 – இலங்கை VS ஆப்கானிஸ்தான் –லாகூர்
செப்டம்பர் 6 – சூப்பர் 4 – ஏ1 VS பி2 – லாகூர்
செப்டம்பர் 7 – இடைவேளை
செப்டம்பர் 8 – இடைவேளை
செப்டம்பர் 9 – பி1 VS பி2 - கொழும்பு
செப்டம்பர் 10 – ஏ1 VS ஏ2- கொழும்பு
செப்டம்பர் 11 – இடைவேளை
செப்டம்பர் 12- ஏ2 VS பி1 – கொழும்பு
செப்டம்பர் 13 – இடைவேளை
செப்டம்பர் 14 – ஏ1 VS பி1 – கொழும்பு
செப்டம்பர்15 – ஏ2 VS பி2 – கொழும்பு
செப்டம்பர் 16 – இடைவேளை
செப்டம்பர் 17 – இறுதி – கொழும்பு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments