தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அஸ்வின்...! 6 கதாநாயகிகள் கொண்ட படத்தில்....?

குக் வித் கோமாளி அஸ்வின் 'மீட் க்யூட்' என்ற புதிய ஆந்தாலஜி மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழில் ஒருசில குறும்படங்களிலும்,  திரைப்படங்களில் இணை நடிகராக நடித்து பிரபலமானவர் தான் அஸ்வின். இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்துக்கொண்ட இவர், தற்போது படங்களில் வெகுபிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல்  சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் 6 கதாநாயகிகள் நடிக்கும் 'மீட் க்யூட்' வலைத்தொடரை பிரபல நடிகரான நாணி தயாரிக்க, அவரது தங்கை இந்த ஆந்தாலஜியை இயக்குகிறார். நடிகர் அஸ்வின் இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

'மீட் க்யூட்'  என்ற இந்த தொடர் 5 கதைகளை உள்ளடக்கியது. சத்யராஜ் மற்றும் ரோகிணி போன்ற பிரபல தமிழ் நடிகர்களும் இதில் நடிக்கிறார்கள். ஓடிடி-யில்  ரிலீஸ்-ஆக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பீஸ்ட் படத்தின் ஹாட் அப்டேட்.....! தளபதியுடன் இணைந்த சிவகார்த்திகேயன்....!

அண்மையில் தான் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள்

புதுவகை மோசடி திருடர்கள்? வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அதன்வழியாக வங்கி விவரங்களை சேகரிக்கும் ஒரு புதுவகை திருட்டு அதிகரித்து இருப்பதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.

அறிமுக இயக்குனர் படம்.....! பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்....!

அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

காதல் மனைவி சாயிஷாவுக்கு உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆர்யா!

பிரபல நடிகர் ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியான அடுத்த நாளே ஆர்யாவுக்கு மகள் பிறந்தார் என்பதும் தெரிந்ததே.

மகளின் தோழிக்கு பாலியல் கொடுமை...! அதிமுக பிரமுகர் கைது.....!

தன்னுடைய மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.