உலகின் பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவர்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய பிரபல வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கொடுத்த 299 என்ற இமாலய இலக்கை இந்திய அணி 49.2 ஓவர்களில் எட்டி வெற்றிக்கனியை பறித்தது. வழக்கம்போல் இந்த போட்டியை தல தோனி 50வது ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் அடித்து முடித்து வைத்தார். இருப்பினும் தோனியுடன் பேட்டிங் செய்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் எடுத்த 25 ரன்களும் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த நிதாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்சர் அடித்து கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கடந்த சில மாதங்களாக உலகின் மிகச்சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் இருந்து வருகிறார். அவருடைய வளர்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது' என்று கூறியுள்ளார்.
Just going through some batting numbers of @DineshKarthik over the last 18 months and its not surprising to see that he has become one of the best finishers in the world right now. This version of DK is all that he ever wanted to be, I am very happy for him. ??#INDvsAUS
— Ashwin Ravichandran (@ashwinravi99) January 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments