ஹெலிகாப்டர் முழுக்க பணம்… ஆப்கன் அதிபர் தப்பிச்சென்றது குறித்து பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானை விட்டுத் தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு கிளம்பும்போது 4 கார்கள் முழுக்க பணத்தை எடுத்துவந்து அதைத் தான் சென்ற இராணுவ ஹெலிகாப்டரில் நிரப்பிக் கொண்டு சென்றதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியவுடன் (ஆக்ஸ்ட் 15) அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கானி “ஆப்கன் மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை“ எனக் கூறி ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதையடுத்து தன்னுடைய பாதுகாப்பு கருதி அரசு அதிகாரிகளுடன் இராணுவ ஹெலிகாப்டரில் ஏறிய அதிபர் அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியது.
தற்போது தஜிகிஸ்தானுக்கு சென்ற அஷ்ரப் கானிக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதையடுத்து ஓமனில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கானியும் பிற அரசு அதிகாரிகளும் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லும்போது 4 கார்களில் கொண்டு வந்ததாகவும் அதை இராணுவ ஹெலிகாப்டரில் நிரப்பிய பிறகே தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய செய்தித்தொடர்பாளர் நிகிதா இஷென்கோ தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிபர் அஷ்ரப்கானுடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ஓமனில் இருக்கும் இவர்கள் அங்கிருந்து அமெரிக்காவிற்கு செல்லவுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கவுள்ள தாலிபான்கள் இப்போதே ஒவ்வொரு வீடாகச் சென்று ஆயுதங்களை கைப்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments