close
Choose your channels

என்னை மீறி எதுவும் நடக்காது: அசோக்செல்வனின் 'ஹாஸ்டல்' டிரைலர்

Thursday, April 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாஸ்டல்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நாசரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர் உள்ளே சென்றவுடன் நடக்குக்ம் கலாட்டாக்கள், மாணவர்களின் சேட்டைகள் என காமெடியாக கதை போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென பேய் வந்து கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதை அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரைலரில் இருந்து தெரியவருகிறது.

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனிஷ்காந்த், கேபிஒய் யோகி என அனைவருமே காமெடியில் கலக்கி உள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பாபோ சசில் இசையில், பிரவீன்குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.