என்னை மீறி எதுவும் நடக்காது: அசோக்செல்வனின் 'ஹாஸ்டல்' டிரைலர்

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாஸ்டல்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நாசரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர் உள்ளே சென்றவுடன் நடக்குக்ம் கலாட்டாக்கள், மாணவர்களின் சேட்டைகள் என காமெடியாக கதை போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென பேய் வந்து கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அதை அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரைலரில் இருந்து தெரியவருகிறது.

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனிஷ்காந்த், கேபிஒய் யோகி என அனைவருமே காமெடியில் கலக்கி உள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பாபோ சசில் இசையில், பிரவீன்குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மன்மதலீலை, ஓ மை டாக்: இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள்!

திரை அரங்குகளுக்கு இணையாக ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதையும் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

சமந்தாவின் அடுத்த பட பூஜை: ஹீரோ யார் தெரியுமா?

நடிகை சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் 'யசோதா' மற்றும் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

'தளபதி 66' படத்தில் நடிப்பது உண்மையா? நடிகர் மோகன் விளக்கம்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66'  திரைப்படத்தில் நடிப்பது உண்மையா? என நடிகர் மோகன் விளக்கமளித்துள்ளார். 

சூர்யா படத்தை பார்க்க விரும்பிய ஜாண்டி ரோட்ஸ்: சூர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?

சூர்யாவின் படத்தை பார்க்க விரும்பிய தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு, சூர்யா கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

40 வயதில் மீரா ஜாஸ்மினின் கிளாமர் போட்டோஷூட்: வாயை பிளந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!

மாதவன் நடித்த 'ரன்' விஷால் நடித்த 'சண்டக்கோழி' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை மீராஜாஸ்மின் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நிலையில் தற்போது 40 வயதிலும் கிளாமர்