அசோக் செல்வனின் 4 ஹீரோயின் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அசோக் செல்வனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘நித்தம் ஒரு வானம்;’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் ஸ்வேதா ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை இரா. கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

18வயாகாம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

'பீஸ்ட்' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்'  படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அந்த அப்டேட் வெளியாகி

எதிர்பார்க்காத நேரத்துல தான் வாழ்க்கை புரட்டி போடும்: கவினின் 'ஆகாஷ்வாணி' டிரைலர்

கவின் நடத்த 'ஆகாஷ்வாணி' என்ற தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் சற்று முன் இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த டிரைலரில்

பிக்பாஸ் நாமினேஷனில் இருந்து தப்பித்த வனிதா: எப்படி தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்

'புஷ்பா' பாடலின் ஆங்கில வெர்ஷனை பாடிய உலகப்புகழ் பெற்ற பாடகி!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம்

'பாகுபலி' பாடகருக்கு திருமணம்: வைரல் புகைப்படம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது