அசோக் செல்வனின் 4 ஹீரோயின் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அசோக் செல்வனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘நித்தம் ஒரு வானம்;’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் ஸ்வேதா ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை இரா. கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
18வயாகாம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thank you so much brotherman! ?? you’re the sweetest ???? ?? @dulQuer #NithamOruVaanam #Aakasham https://t.co/c87pqpxVo2
— Ashok Selvan (@AshokSelvan) February 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments