அசோக்செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்க காத்திருக்கின்றனர். ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் அவர்கள் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிடுவார்கள். அந்த ஒரு வெற்றி ஒரு சிலருக்கு உடனே வெற்றி கிடைத்துவிடும், ஒரு சிலருக்கு பல ஆண்டுகள் கழித்தே வெற்றி கிடைக்கும்.
அந்த வகையில் ஒரே ஒரு சூப்பர்ஹிட் வெற்றிக்காக காத்திருந்த நடிகர் அசோக் செல்வனுக்கு சமீபத்தில் வெளியான ’ஓ மை கடவுளே’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று அவரை முன்னணி நடிகர்கள் பட்டியலுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அசோக்செல்வன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இந்நிறுவனத்தின் 7வது தயாரிப்பாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் நிகாரிகா நடிக்க உள்ளனர். இந்த படத்தை ஸ்வாதினி இயக்க உள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில் ஏஆர் சூர்யா ஒளிப்பதிவில் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த படத்தின் பூஜை எளிமையான நடைபெற்றதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கெனன்யா பிலிம்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பூஜை குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து அசோக்செல்வனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.