அசோக்செல்வன் அடுத்த படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி, ஆர்யா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் அடுத்த படமான “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்டனர்.
T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன்.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Very happy to launch the first look of #EmakkuThozhilRomance , More Updates very soon.
— VijaySethupathi (@VijaySethuOffl) March 15, 2024
⭐ing @AshokSelvan @Avantika_mish
@nivaskprasanna @ThirumalaiTv #MsBhaskar #Oorvasi #TCreation @teamaimpr pic.twitter.com/fVzB9yUTMg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments