பள்ளி மாணவராக கலக்கும் அசோக் செல்வன்.. 'சபா நாயகன்' டீசர்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

நடிகர் அசோக் செல்வன் பள்ளி மாணவராக நடித்திருக்கும் ‘சபா நாயகன்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரல் ஆகி வருகிறது

தமிழ் திரை உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு ’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’தெகிடி’ ’ஆரஞ்சு மிட்டாய்’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’ஹாஸ்டல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று ‘சபா நாயகன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘சபா நாயகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் அந்த டீசர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருக்கும் நிலையில் அந்த காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.