மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த 'தெகிடி' பட நடிகர்.. போலீசார் தீவிர விசாரணை..!

  • IndiaGlitz, [Thursday,June 13 2024]

நடிகர் அசோக் செல்வன் நடித்த ’தெகிடி’ திரைப்படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’,‘லிஃப்ட்’, ‘இரும்புத் திரை’ உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டரை நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எந்தவிதமான பதிலும் இல்லை என்பதை அடுத்து காவல்துறை உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு விசாரணை செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குணச்சித்திர நடிகர் பிரதீப் கே விஜயன் மர்ம மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் விபத்து.. பிரபல நடிகருக்கு எலும்பு முறிந்ததாக தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தக்லைஃப்'.

கள்ளக்காதலியுடன் ஓட்டல் ரூமில் இருந்த நடிகர்.. கையும் களவுமாக பிடித்த நடிகரின் மனைவி..!

பிரபல நடிகர் தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் ரூமில் இருந்ததை அவருடைய மனைவி நேரில் பார்த்ததை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. 

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 - துலாம் முதல் மீனம் வரை! யாருக்கு என்ன நடக்கும்?

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும்,

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 - மேஷம் முதல் கன்னி வரை! யாருக்கு என்ன நடக்கும்?

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அது மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகளை எவ்வாறு

நயன்தாரா நடிக்க வேண்டிய படத்தில் சமந்தா.. பிரபல இயக்குனரின் அதிரடி மாற்றம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகி ஆக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும்