டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் திரைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவான “சபா நாயகன்” திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து வருகிறது.
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் C S கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட்டடு ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம் "சபா நாயகன்". ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக உருவான இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஒரு இளைஞனின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை கல்லூரிக்கு பின்னான வாழ்க்கை என மூன்று காலகட்டத்தில் அவன் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், அவனது காதல் பற்றியும் கலக்கலான காமெடி கலந்து சொல்கிறது இப்படம். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய C.S. கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். Clear Water Films Inc. சார்பில் அரவிந்த் ஜெயபாலன் i cinema சார்பில் ஐயப்பன் ஞானவேல் & Captain Mega Entertainment சார்பில் கேப்டன் மேகவாணன் இசைவாணன் இணைந்து தயாரித்துள்ளனர்.
மூன்று காலகட்டத்தில் விதவிதமான தோற்றங்களில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி & மேகா ஆகாஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். அருண் குமார் ஜெய்சீலன், ஶ்ரீராம் நண்பர்களாக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குடும்பத்துடன் சிரித்து மகிழ மிகச்சரியான பொழுதுபோக்கு திரைப்படம் எனும் வகையில், பாராட்டுக்களை பெற்று வருவதோடு, பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments