ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருந்த கணவன் - மனைவி திரைப்படங்கள்.. ஜஸ்ட் மிஸ் ஆனது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கணவன் மனைவியாக இருக்கும் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தனித்தனியாக ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ஒரு திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் சமீபத்தில் தம்பதிகளாக இணைந்தவர்கள் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்பதும் இவர்களது திருமணம் திருநெல்வேலியில் வெகு சிறப்பாக நடந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்த ’கண்ணகி’ மற்றும் அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியே நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திடீரென அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் தாமதமானதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது.
அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சபா நாயகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
My Dear Makkalay, due to the cyclone flood which led to postproduction and certification delay, #SabaNayagan has been pushed to the 22nd this month. See you in the theatres soon ❤️ #SabaNayaganOnDec22nd pic.twitter.com/pKXWyVniES
— Ashok Selvan (@AshokSelvan) December 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments