ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருந்த கணவன் - மனைவி திரைப்படங்கள்.. ஜஸ்ட் மிஸ் ஆனது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,December 13 2023]

தமிழ் திரையுலகில் கணவன் மனைவியாக இருக்கும் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தனித்தனியாக ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ஒரு திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் சமீபத்தில் தம்பதிகளாக இணைந்தவர்கள் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்பதும் இவர்களது திருமணம் திருநெல்வேலியில் வெகு சிறப்பாக நடந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடித்த ’கண்ணகி’ மற்றும் அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியே நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திடீரென அசோக் செல்வன் நடித்த ’சபா நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் தாமதமானதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சபா நாயகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் 'கூச முனிசாமி வீரப்பன்' பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்

'லால்சலாம்' படத்தின் மாஸ் வீடியோ.. ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170 வது திரைப்படத்தின் டைட்டில் 'வேட்டையன்' என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் சற்று முன் வெளியிட்ட நிலையில் அவர் நடித்துவரும் இன்னொரு

கல்லூரியில் படிக்கும்போதே காதல்.. 'வானத்தை போல' சீரியல் நடிகையின் நிச்சயதார்த்தம்..!

கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துக் கொண்டிருந்த 'வானத்தைப்போல' சீரியல் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'குறி வச்சா இரை விழனும்': 'தலைவர் 170' படத்தின் மாஸ் டைட்டில்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 'கண்ணகி'யில் அறிமுகமாகும் நடிகர் நெகிழ்ச்சி..!

டிசம்பர்  15ஆம் தேதி வெளியாகும் 'கண்ணகி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆதேஷ் சுதாகர் என்பவர்  சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் நெகிழ்ச்சியை