பேட்ஸ்மேன், பெளலரை விட எனக்கு ஆல்ரவுண்டர் தான் ரொம்ப பிடிக்கும்: 'ப்ளூ ஸ்டார்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த 'ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்டதுதான் இந்த படம் என்பது தெரிய வந்துள்ளது. அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் எதிரெதிர் அணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் என்ற நிலையில் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள், சோதனைகள், வாழ்த்துக்கள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை.
இதோடு அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் லவ் ட்ராக் தனியாக உள்ளது. அசோக் செல்வன் மனம் தளரும் போது கீர்த்தி பாண்டியன் அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசும் காட்சிகள் சுவாரசியமாக உள்ளது,
நீங்கல்லாம் எல்லாம் கிரிக்கெட் ஆடுவதற்கு ஒரு தகுதி வேண்டும், யாரிடம் தோற்றோம் என்று பார்க்க கூடாது ஏன் தோல்வி அடைந்தோம் என்று தான் பார்க்க வேண்டும் போன்ற வசனங்களை பார்க்கும்போது இந்த படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சாதி எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது,
பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஜெயகுமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில், செல்வா படத்தொகுப்பில், தமிழ் அழகன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிரித்திவிராஜ், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com