ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஹவுஸ் ஓனராக' மாறிய பெண் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் பெண் இயக்குனர்கள் அரிதாகவே இருக்கும் நிலையில் குணசித்திர நடிகையாகவும் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற படங்களை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் நாயகன் அசோக் செல்வன் என்றும் இந்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சொந்த வீடு வாங்க அசோக்செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பதிகள் முடிவு செய்வதும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout