'நேரம்' தெலுங்கு ரீமேக்கில் சந்தானம் நாயகி?
Send us your feedback to audioarticles@vaarta.com
நிவின்பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'நேரம்' திரைப்படம் தமிழ், மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்தார். இந்த படத்திற்கு பின்னர்தான் நஸ்ரியா கோலிவுட்டில் பரபரபாக பேசப்பட்டார்.
இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நிவின்பாலி வேடத்தில் சந்தீப் கிஷான் நடிக்கவுள்ளதாகவும், நஸ்ரியா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆஷ்னா ஜாவேரி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் கீர்த்தி சுரேஷ் 'இது என்ன மாயம், மற்றும் ரஜினிமுருகன்' ஆகிய படங்களிலும், ஆஷ்னா ஜாவேரி சந்தானம் நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்திலும் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments