60 வயதில் திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி… மனைவியுடன் சுற்றுலா புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய சினிமாவில் வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகர் என்று பல்வேறு அடையாளங்களுடன் வலம்வந்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருடைய மனைவியுடன் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராத்தி, ஒடியா, கன்னடம் என்று 11 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நடிப்பில் அசத்தி இருப்பார். அந்த வகையில் இந்தியில் வெளியான Drohkall திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் ‘தில்‘, ‘பகவதி‘, ‘தம்‘, ‘பாபா’, ‘ஏழுமலை’, ‘தமிழன்’ என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத்தவிர நடிகர் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்திருந்த ‘கில்லி’ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் 60 வயதான இவர் கடந்த மே மாதத்தில் 33 வயது தொழில் அதிபர் ரூபாலி பருவா என்பவரை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். டெல்லியைச் சேர்ந்தவரான இவர் முன்னதாக நடிகை சாகுந்தலா பருவா என்பவரது மகள் ராஜோஜி பருவா என்பவரைத் திருமணம் செய்திருந்த நிலையில் இவர்களுக்கு ஆரத் வித்யார்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2022 இல் இந்த தம்பதிகள் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் அசாம் மாநிலம் குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாகத் நடிகர் ஆஷிஷ் திருமணம் செய்துகொண்டார். ரூபாலி கொல்கத்தா பகுதியில் மிக உயர்ந்த ஆடை வர்த்த நிறுவனத்தையும் ஒரு உணவகத்தையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக 60 வயதில் திருமணம் செய்துகொணட் ஆஷிஷ் வித்யார்த்தி குறித்து சமூக வலைத்தளத்தில் கடுமையான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இத்தகைய விமர்சனங்களை தவிர்த்துவிட்ட இந்தத் தம்பதிகள் முன்பு சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு இருவரும் சென்றுள்ள நிலையில் அதுகுறித்த புகைப்படங்களை ரூபாலி பகிர்ந்து கொண்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com