60 வயதில் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி.. முதல் மனைவியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா’ தளபதி விஜய் நடித்த ’கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தற்போது 60 வயதில் இருக்கும் நிலையில் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை ஆஷிஷ் வித்யார்த்தி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்தில் இரு குடும்பத்தில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பருவா தனது சமூக வலைத்தளத்தில் இந்த திருமணம் குறித்து மறைமுகமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு சரியான நபர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார். அதேபோல் உங்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ள மாட்டார் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார். அதேபோல் இன்னொரு பதிவில், ‘அதிக சிந்தனையும் சந்தேகமும் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும், அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும். நீண்ட காலமாக நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள், உங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இது, நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்’ என்று பதிவு செய்துள்ளார்