குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த மேலும் ஒரு பாஜக பிரபலம்: நன்றி தெரிவித்த குஷ்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வசந்தகுமார் எம்பி மரணம் அடைந்தபோது அவரது படத் திறப்பு விழாவுக்கு கூட குஷ்புவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை மேலும் புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை, குஷ்புவை பாஜகவில் இணையுமாறு அழைப்பு விடுத்த நிலையில் இன்று மேலும் ஒரு பாஜக பிரபலமான ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர் குஷ்புக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்
இன்று குஷ்புவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு தனது டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஆசிர்வாதம் ஆச்சாரி, ‘
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
என்ற திருக்குறள் ஒன்றைம் பதிவு செய்துள்ளார். இந்தத் திருக்குறளுக்கு ‘தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார் என்பது பொருளாகும்
இந்த குறள் மூலம் ‘நீங்கள் பாஜகவிற்கு வாருங்கள் உங்களை வெல்ல யாரும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் ஆசிர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்
ஆசீர்வாதம் ஆச்சாரியின் இந்த டுவிட்டுக்கு நடிகை குஷ்பு நன்றி மட்டும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்புவுக்கு பாஜகவில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் குஷ்புவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போ
My birthday wishes to @khushsundar . May God give you all the happiness.
— Dr. Aseervatham Achary / முனைவர். ஆசீர் ஆச்சாரி (@AseerAchary) September 29, 2020
Read Tirukkural: 494. Chosen specially for you. pic.twitter.com/DHxYJjsFKc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments