சுந்தர் சி-தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் இணைந்த மிகப்பெரிய டெக்னீஷியன்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

கோலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் 100வது படம் மிகவும் பிரமாண்டமாக சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், சாபு சிரில் கலை இயக்குனராகவும், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் டிசைனராகவும் பணிபுரிய ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்ய பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் அசீம் மிஸ்ரா என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடித்த 'பாஜ்ராங்கி பைஜான்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கமித்ரா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.