சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உபி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சாமியார் கைது செய்யபட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நீதிபதியே ஜோத்பூர் சிறைக்கு சென்று தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பில் ஆசாராம் பாபு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய சாமியாரின் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
முன்னதாக இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதை அடுத்து ஜோத்பூர் சிறைக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com