அசல் கோலார், பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கோளாறுதானா? வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கடலை போட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியை அவர் கரெக்ட் செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்னரே அசல் கோலார் கோளாறாத்தான் இருந்துள்ளார் என ரசிகர்கள் அவரது வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஜிபி முத்து மற்றும் சாந்தி போட்டியில் இருந்து வெளியேறி விட்டனர் என்பதும் தெரிந்ததே.

அசீம் ஆயிஷா சண்டை உள்பட பல சுவராசியமான நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருந்தாலும் நெட்டிசன்கள் பார்வையெல்லாம் அசல் கோலார் மேலே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குயின்ஸியின் கையைப் பிடித்து மாவு பிசைவது போல பிசைவது, ஜனனி கை கொடுப்பது எப்படி என்று பாடம் எடுப்பது போல அவரது கையை பிடித்துக் கொள்வது என பல்வேறு செயல்களில் அசல் கோலார் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட நிவாஷினியை அசல் கோலார் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் இருவரும் வெளியே செல்லும்போது ஜோடியாகத்தான் வருவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்பே அவர் பார்ட்டி கும்மாளம் என்று ஜாலியாக இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூட ஒரு இளம் பெண்ணை அசல் கோலார் கட்டி பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அசல் கோலார் நிஜத்திலேயே கோளாறு என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

மகனுடன் சென்னையில் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்: என்ன காரணம்?

நடிகை எமி ஜாக்சன் இந்த ஆண்டு தீபாவளியை சென்னையில் கொண்டாடிய நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அது அவ்வளவு ஈஸி இல்லைங்க.. 'தளபதி 67' படம் குறித்து கார்த்தி!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'தளபதி 67'  படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களின் கேரக்டர்கள் இடம்பெறும் என்று கூறப்படும்

'சர்தார்' வெற்றியை அடுத்து படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு.. கார்த்தி ரசிகர்கள் குஷி!

தீபாவளி விருந்தாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு

ரோமியோ பிச்சர்ஸ் மற்றும் பிளாக் ஷீப்.. கலக்க வரும் புதிய கூட்டணி! 

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள்.

போடறதுன்னு ஆயிப்போச்சு, கைகால்ல போடாம கழுத்துல போடு.. 'இடம் பொருள் ஏவல்' டிரைலர்

விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி நீண்ட காலமாகியும் ஒரு சில பிரச்சனை