அசல் கோலார், பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கோளாறுதானா? வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கடலை போட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியை அவர் கரெக்ட் செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்னரே அசல் கோலார் கோளாறாத்தான் இருந்துள்ளார் என ரசிகர்கள் அவரது வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஜிபி முத்து மற்றும் சாந்தி போட்டியில் இருந்து வெளியேறி விட்டனர் என்பதும் தெரிந்ததே.
அசீம் ஆயிஷா சண்டை உள்பட பல சுவராசியமான நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருந்தாலும் நெட்டிசன்கள் பார்வையெல்லாம் அசல் கோலார் மேலே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குயின்ஸியின் கையைப் பிடித்து மாவு பிசைவது போல பிசைவது, ஜனனி கை கொடுப்பது எப்படி என்று பாடம் எடுப்பது போல அவரது கையை பிடித்துக் கொள்வது என பல்வேறு செயல்களில் அசல் கோலார் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட நிவாஷினியை அசல் கோலார் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் இருவரும் வெளியே செல்லும்போது ஜோடியாகத்தான் வருவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்பே அவர் பார்ட்டி கும்மாளம் என்று ஜாலியாக இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூட ஒரு இளம் பெண்ணை அசல் கோலார் கட்டி பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அசல் கோலார் நிஜத்திலேயே கோளாறு என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
Avan fans lam indhu pakkule pola : #biggbosstamil6 #asalkolaru #asalkolar #asal https://t.co/lQhjrv6WGp pic.twitter.com/vNgT6BpIDP
— I’ts Hasini?? (@vibe_yourself) October 24, 2022
#Kolaru - Thinam oru Silmisham ????♂️#Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/FzTaggkqH7
— VCD (@VCDtweets) October 22, 2022
Kolaaru’s Today’s Quota!
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 21, 2022
pic.twitter.com/l2XDxmcKWa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com