கதறியழுத நிவாஷினியை ஒரே வார்த்தையில் சிரிக்க வைத்த அசல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அசல் கோலார் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அசல் வெளியேறும்போது நிவாஷினி கதறி அழுத நிலையில் அவரிடம் ஒரே ஒரு வார்த்தை கூறி அவரை சிரிக்க வைத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் அசல் நேற்று எலிமினேட் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். மேலும் நீங்கள் ஏன் எலிமினேட் செய்யப்பட்டீர்கள் என்பதை நீங்கள் வெளியே போனதும் உங்கள் நண்பர்கள் உங்களிடம் சொல்வார்கள் என கமல் கூறியது செம பஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அசல் கோலாரை அனைத்து போட்டியாளர்களும் வழியனுப்பி வைத்தனர். அப்போது நிவாஷினி மட்டுமே கதறி அழுதார். அவர் ஏன் அழுதார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் நிவாஷினி அசலை கட்டிப்பிடித்து கதறி அழுத நிவாஷினியிடம், ‘அப்படி இப்படி ரொம்ப வருத்தமாக இருந்தால் நீயும் வெளியே வா’ என்று அசல் கூறியவுடன் நிவாஷினி உடனே சிரித்து விட்டார். வெளியே வருவது எப்படி என்பதை பற்றி யோசி என்று அவர் கூறி விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் அசல்-நிவாஷினி உறவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enna Soldran parunga ????
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 30, 2022
Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/wwtrNkNlhU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout