முதல் நாளில் இருந்து ஒரே ரொமான்ஸ்தான்: ஜனனியிடமும் வேலையை காட்டிய அசல் கோளாறு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் முழுநேர ரொமான்ஸ் மன்னன் என்று யாரையும் கூறமுடியாது. ஆனால் 6வது சீசனில் அசல் கோளாறு முதல் நாளிலிருந்தே தனது ரொமான்ஸை பிக்பாஸ் வீட்டில் உள்ள பல பெண்களிடம் காட்டி வருகிறார் என்பதும் சில சமயம் அத்துமீறி வருகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பெண் போட்டியாளர்கள் பலரின் அனுமதி இன்றி அவர்களை தொடுவது, நெருக்கமாக நின்று பேசுவது, முதுகில் கோலம் வரைவது உள்பட அசல் கோளாறு செய்யும் பல லீலைகளை 24 மணி நேர நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜனனியிடம் கை கொடுப்பது எப்படி என்பது குறித்த பாடத்தை எடுக்கும் சாக்கில் அவரிடமும் தனது வேலையை காட்டி உள்ளார். கை கொடுப்பதில் பலவிதங்கள் இருக்கிறது என்றும் அவற்றில் ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு குணம் இருக்கிறது என்று அசல் கோளாறு ஜனனிக்கு சொல்லித் தருகிறார்.

கை கொடுப்பது எப்படி என்று சொல்லித் தரும் சாக்கில் ஜனனியை தொட்டு பேசுவதும் அவர், அருகில் நெருக்கமாக இருப்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அண்ணனாக இதை நான் உனக்கு கற்று தருகிறேன் என்று அசல் கோளாறு கூறினாலும் இந்த வீடியோவை பார்க்கும் யாருக்கும் இது ஒரு அண்ணன் செய்யும் செயல்போல் தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஆனால் இலங்கை தமிழ் பெண்ணாக ஜனனி அவரிடம் ஏமாற மாட்டார் என்பது இந்த வீடியோ காட்சிகள் இருந்து தெரியவருகிறது. மொத்தத்தில் ரொமான்ஸ் மன்னனாக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் அசல் கோளாறு வெளியே வரும்போது ஏதாவது ஒரு பெண்ணுடன் ஜோடியாக வருவாரா? அல்லது பிக்பாஸ் பெண்கள் அவருக்கு சரியான பாடத்தை கற்று தருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.