எவர்கிரீன் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

பாலிவுட் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உலக அழகிப்போட்டியில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றவர் ஐஸ்வர்யா ராய். அதற்குப் பிறகு இந்தியர்களின் மனதில் என்றும் உலக அழகியாகவே குடிகொண்டு விட்டார். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் முதன் முதலில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “இருவர்“ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்குப் பிறகு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜீன்ஸ்” படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்தியர்களையும் கட்டிப்போட்டார். திறமையான நடிப்பு, வேகமான நடின அசைவு மற்றும் அழகான சிரிப்பு மூலம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார்.

நடிகர் மம்முட்டி, தபு, அஜித் ஆகியோர் நடிப்பில் உருவான “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்“ திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா போட்டிப் போட்டு நடித்திருப்பார். அதேபோல பாலிவுட்டில் உருவாகி தமிழில் வெளியிடப்பட்ட “தாளம்“ திரைப்படத்தின் மூலமும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். சமீபத்தில் வெளியான “ராவணன்“ திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இதனால் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன் மற்றும் முன்னணி நடிகை ஜெயா பச்சனுக்கு மருமகள் ஆனார். தற்போது அபிஷேக்- ஐஸ்வர்யா ஜோடிக்கு ஆராத்யா எனும் அழகான மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எவர்கிரீன் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தனது 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருடைய குடும்பப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

More News

புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடைய இசைஞானி செய்த செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய

கொல்லிமலை ஆகாயகங்கையில் படமாகும் முதல் தமிழ்ப்படம்!

கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து உள்ள காட்சியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பானிய வாள்சண்டை பழகும் தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஜப்பானிய வாள்சண்டை வகுப்பிற்கு செல்லும் காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?

பொதுவாக கண் தானம் செய்யப்பட்டவர்களுடைய கண்கள் இருவருக்கு தானம் செய்யப்பட்டு அவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மரணமடைந்த

மீண்டும் இணைகிறதா 'எனிமி' டீம்? இயக்குனர் மட்டும் மாற்றமா?

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது