ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி.. அதே நாளில் ரிலீஸாகும் இன்னொரு படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா நடித்த ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அது குறித்த புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தான் ஹிப் ஹாப் தமிழா நடித்த ’வீரன்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இதானி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், மதுசூதனராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட்ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
Our #KatharbashaEndraMuthuramalingam Worldwide Release on JUNE 2 with style and swag!💥#KEMTheMovie #KEMOnJUNE2@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @jungleemusicSTH @ActionAnlarasu @Kirubakaran_AKR @ertviji pic.twitter.com/nRPOtd66MT
— Drumsticks Productions (@DrumsticksProd) May 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments