ஆர்யன்கானுக்கு ஜாமின் கிடைத்தது எப்படி? மும்பை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் சற்று முன் ஜாமீன் அளித்துள்ள நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்யன்கான் மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு மூன்று முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கானுக்கு மீண்டும் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோத்தகி என்பவர் வாதாடினார். அவரது வாதத்தின் போது ‘ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் அவரிடமிருந்து எந்த ஒரு போதைப் பொருட்கள் கைப்பற்றப் படவில்லை என்றும் திறமையாக வாதாடியதாகவும், அதனை அடுத்து அவருக்கு ஜாமின் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஆர்யன்கனௌக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு தரப்பிலிருந்து வாதாடியபோதிலும், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்களின் வாதத்திறமையால் ஆர்யன்கானுக்கு கிடைத்ததாக மும்பை உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இருபத்தி ஆறு நாட்களுக்கு பிறகு ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் இன்னும் ஒரு சில நிமிடங்களில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் ஷாருக்கான் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.