நடிகர் ஷாருக்கான் மகனுக்கு இதுவரை கிடைக்காத ஜாமீன்… பகீர் பின்னணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் ஆர்யன்கான் நீண்டகாலமாகவே போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளதாக NCP அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜாமீன் மனுமீதான விசாரணை வரும் 20 ஆம்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா நோக்கிச் சென்ற கார்டிலியா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு காரில் போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாக NCP அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை NCP காவலை நீடித்த மும்பை நீதிமன்றம் பின்பு அக்டோபர் 21 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.
தற்போது இந்த வழக்கின் மீதான இரண்டாம்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ஆர்யன்கானுக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது நேற்று இரண்டாவது முறையாக ஆர்யன்கான் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது ஆர்யன்கான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது பொய்யான வழக்கு. ஆர்யன் கானை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. கைது செய்யப்பட்ட போது ஆர்யன்கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டார்.
ஆனால் எதிர்தரப்பில் வாதாடிய NCP அதிகாரிகள் ஆர்யன்கான் நீண்டகாலமாகவே போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளதாக அதிரடி விளக்கம் அளித்துள்ளனர். மேலும் போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. அவரது வாட்ஸ் அப் உரையாடல்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளன. இதனால் அவரை ஜாமீனில் விடுவித்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைப்பார். காந்தி தேசத்தின் ஆர்யன்கான் போன்ற இளைஞர்கள் போதை மருந்து உட்கொண்டு சீரழிவது வேதனையான விஷயம் என்று வாதிட்டுள்ளனர்.
இதையடுத்து ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்யன்கான், மும்பை ஆர்தர் சாலை சிறையின் குவாரன்டைன் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments