ஷாருக்கான் மகன் நிரபராதியா? தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பின் முக்கிய அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,May 27 2022]
போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என போதை பொருள் தடுப்பு அமைப்பு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஆர்யன்கான் ஒரு மாதம் சிறையில் இருந்து அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது ஆர்யன்கான் நிரபராதி என்றும் அவரது பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நீக்கியுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஆர்யாகான் குற்றவாளி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆர்யன்கானிடம் இருந்து எந்தவித போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவருடைய மொபைல் போனிலும் போதைப்பொருள் பரிமாற்றம் செய்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் போதைபொருள் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் போதை கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் பட்டியலில் ஆர்யன்கான் பெயர் இடம் பெறவில்லை என்பது ஷாருக்கான் குடும்பத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.