எனது நடனத் திறமைக்கு இதுதான் காரணம்… சாயிஷா வெளியிட்ட அட்டகாசமான பதிவு!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமா வட்டாரத்தில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம்வரும் நடிகர் ஆர்யா- நடிகை சாயிஷா தம்பதியினருக்கு கடந்த ஜுலை மாதம் அழகான பெண் குழந்தை பிறந்ததும் இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து மழையை பொழிந்ததும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான்.
இந்நிலையில் நடிகை சாயிஷா நடனப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே அபாரமான நடனத் திறமைக் கொண்ட நடிகை சாயிஷாவின் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் குழந்தைப் பெற்ற பிறகும் இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறாரோ என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து நடிகை சாயிஷா தன்னுடைய நடனத் திறமைக்கு என்ன காரணம் என்பதை கேப்ஷனில் தெரிவித்து உள்ளார். அதில், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒருபோதும் பயிற்சியை கைவிடமாட்டேன். இதுவே எனது நடனப் பயிற்சியின்போது எனது அடிப்படை சிந்தனையாக இருந்தது. நான் நடனத்தின் பல வடிவங்களில் கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒவ்வொருவரும் அதைச் சரியாகப் பெறுவதற்கு கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும்.
அது நீட்சியாக இருந்தாலும் நெகிழ்வுத் தன்மையாக இருந்தாலும் கருணையாக இருந்தாலும் நான் எந்த முயற்சியையும் விடவில்லை. அதிர்ஷ்டவசமாக என்னைப் போலவே சிந்திக்கும் ஒரு துணையை நான் கண்டுபிடித்துள்ளேன். எனவே ஒருவரையொருவர் ஊக்குவிப்பதன் மூலம் ஒருபோதும் கைவிடாமல் இருப்பது எளிது எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு தனது கணவர் ஆர்யாவுடன் “டெடி“ திரைப்படத்தில் நடிகை சாயிஷா நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது “யுவரத்னா“ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
