ஆர்யாவின் 'யட்சன்'. ஒரு முன்னோட்டம்

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

ஆர்யா, கிருஷ்ணா, நடிப்பில் யூடிவி நிறுவனம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் திரைப்படம் 'யட்சன்'. இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.

கடந்த 2005ஆம் ஆண்டு 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஷ்ணுவர்தன், இந்த பத்து வருடங்களில் ஆர்யாவை வைத்து இயக்கும் ஐந்தாவது படம் 'யட்சன்' என்பது குறிப்பிடத்தக்கது. அறிந்தும் அறியாமலும்' படத்திற்கு பின்னர் பட்டியல், சர்வம், ஆரம்பம் ஆகிய படங்களில் இருவரும் ஏற்கனவே இணைந்துள்ளனர்.

வேட்டை, சேட்டை, புறம்போக்கு ஆகிய படங்களுக்கு பின்னர் பிரபல தயாரிப்பு நிறுவனமான யூடிவி நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா நடித்துள்ள படம்.

ஜெயம் சகோதரர்களின் சூப்பர் ஹிட் வெற்றி படமான 'தனி ஒருவன்' படத்திற்கு பின்னர் பிரபல எழுத்தாளர்கள் சுபா பணியாற்றிய படம்

யுவன்ஷங்கர் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம்

ஹாலிவுட் திரைப்படமான 'லைஃப் ஆப் பை' (Life of Pi) படத்தில் நடித்த 'அடில் ஹுசைன்' வில்லனாக மிரட்டியிருக்கும் படம்

எல்லாவற்றுக்கும் மேலாக அஜீத் ரசிகராக ஆர்யா நடித்துள்ள படம். அஜீத்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது மற்றும் அஜீத்தின் படம் ரிலீஸாகும் முதல் நாள் முதல் காட்சியில் அவருடைய புகழை ஒரு பாடலில் பாடுவது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய படம்.

இத்தனை அம்சங்கள் நிறைந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை வரும் வெள்ளிக்கிழமை 'யட்சன்' திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

More News

வெற்றிகரமான 'விஜய் 59 'பட தலைப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜில்லா' ...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

'சஞ்சய் தத்'தின் எளிமையை அஜீத்திடம் பார்த்தேன். ராகுல் தேவ்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இறுதிக்க

5 மொழிகளில் ரீமேக் ஆகிறதா ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்?

ரீமேக் ராஜா என்ற பெயரை கடந்த பல வருடங்களாக பெற்றிருந்த ஜெயம் ராஜாவின் சொந்த ஸ்கிரிப்டில் உருவான 'தனி ஒருவன்' பெற்ற மிகப்பெரிய வெற்றியால்...

ரூ.50 கோடி வசூலை நெருங்குகிறது ''தனி ஒருவன்''

சமீபத்தில் வெளியான ''தனி ஒருவன்'' திரைப்படம் இதற்கு முன்பு வெளியான இந்த சகோதரர்களின் படங்களை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் பெரிய சாதனை செய்துள்ளது...