close
Choose your channels

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் ஆர்யா.. இந்த படத்திற்காகவா? வைரல் வீடியோ..!

Tuesday, February 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பார் என்பது தெரிந்தது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ’சார்பாட்டா பரம்பரை’ படத்திற்காக அவர் உடலை ஏற்றி ஒரு குத்துச்சண்டை வீரராகவே மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தற்போது ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் ஆர்யா நடித்து வரும் நிலையில் விளையாட்டு கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக வேற லெவலில் வொர்க் அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யாவுடன் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், சரத்குமார், அனகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தாமஸ் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment