'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்'.. ஆர்யா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

நடிகர் ஆர்யா கடந்தாண்டு மார்ச் மாதம் இருந்த உடற்கட்டு புகைப்படத்தையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ள உடற்கட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரே ஆண்டில் தான் எப்படி மாறிவிட்டேன் என்பதை குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா ஹீரோக்கள் தற்போது தாங்கள் நடிக்கும் கேரக்டருக்காக தங்கள் உடலை வருத்தி வொர்க்கவுட் செய்து வருகின்றனர் என்பதும் ஏற்கனவே நடிகர் ஆர்யா ’சார்பாட்டா பரம்பரை’ படத்திற்காக ஒரு நிஜ குத்துச்சண்டை வீரன் போலவே மாறிய நிலையில் தற்போது ’மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக நிஜ ஆணழகன் போலவே மாறி உள்ளார்.

இந்த படத்தில் தான் கமிட்டானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் என்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது என்றும் ஆர்யா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய உடற்கட்டு புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவரது உடல் தொழதொழ என உள்ளது. ஆனால் இப்போது ஒரே வருடத்தில் அவர் நிஜ ஆணழகன் போலவே மாறிவிட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவரது டெடிகேஷனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர் மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் நிச்சயம் ஆர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.