close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் 'தி கிரேட் ஃபாதர்' படத்தில் ஆர்யா

Sunday, August 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் ரொமான்ஸ் நாயகன் என்று அழைக்கப்பட்ட ஆர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக நேரம் சரியில்லை போலும். கடந்த 2013-ல் வெளியான 'ராஜா ராணி' படத்திற்கு பின்னர் வெளியான ஆர்யாவின் படம் எதுவும் எதிர்பார்த்த வசூலை தரவில்லை
இந்நிலையில் அவர் மஞ்சப்பை' இயக்குனர் ராகவன் இயக்கி வரும் 'கடம்பன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அமீர் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் மலையாள படம் 'தி கிரேட் ஃபாதர்' என்ற படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார். தந்தை மகளாக மம்முட்டி, சாரா நடித்து வரும் இந்த படத்தை ஆர்யா, பிரித்விராஜ், சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர்களின் 'ஆகஸ்ட் சினிமா' என்ற நிறுவனம் தயாரிக்கின்றது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.