ஆர்யாவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? நயன்தாரா ஒப்புக்கொள்வாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்யா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவான ’பாஸ் என்ற பாஸ்கரன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அப்போது ரஜினியின் ’எந்திரன்’ படத்திற்கு பெரும் சவாலாக இந்த படம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆர்யா. ராஜேஷ் எம் மீண்டும் இணையும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இருப்பினும் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்வார்கள் என்றும் ஒருவேளை அவர் நடிக்கவில்லை என்றால் வேறு பிரபல நடிகையை தேர்வு செய்வார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படம் முதல் பாகம் போலவே காமெடியில் கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout