ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரின் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் சமூக வலைத்தளபக்கமும் உறுதி செய்துள்ளது.

இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான 'ஹரஹர மகாதேவகி' என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' நாயகி சாயிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு 'கஜினிகாந்த்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படம் குறித்த பிற விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.