'சார்பாட்டா பரம்பரை 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த ஆர்யா..!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கலந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘சார்பாட்டா பரம்பரை 2’ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்யா நடித்த ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் புரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஆர்யா, ‘சார்பாட்டா பரம்பரை 2’ படத்தின் சூப்பர் அப்டேட்டை பகிர்ந்து உள்ளார்.

’காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் விழாவில் பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை தயாராகி வருகிறது என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது விக்ரம் நடித்துவரும் ’தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அவர் ‘சார்பாட்டா பரம்பரை 2’ படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிரபல நடிகரின் பிறந்த நாளுக்காக செம்ம ஆட்டம் போட்ட குஷ்பு.. வைரல் வீடியோ..!

பிரபல நடிகரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

நாட்ல 60% பேர் கெட்டவன் தான், எல்லாரையும் துப்பாக்கியில சுட்ருவியா? 'லைசென்ஸ்' டிரைலர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்த 'லைசென்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மஹி ராக்ஸ்டார்… கத்தியபடியே சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய பாலிவுட் பிரபலம்… வைரல் வீடியோ!

மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

கேன்ஸ் விழாவில் நடிகை சமந்தாவின் திரைப்படத்திற்கு விருதா? மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள்!

உலக அளவில் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விருது விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படத்திற்கு பல பிரிவுகளில் விருது கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

14 ஓவர் முடிந்ததும் கதறியழுத  இளம்பெண், வெற்றி பெற்றதும் துள்ளி குதித்த காட்சி: வைரல் வீடியோ..!

 நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் 14 ஓவர் முடிவில் சென்னை அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது பலருக்கு சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.