ஆர்யா-சாயிஷா ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஆர்யா-சாயிஷா ஜோடியும் ஒன்று என்பது தெரிந்ததே. இந்த ஜோடி முதன்முதலாக திரையில் ஜோடியாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘டெடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக ‘டெடி’ படத்தில் இடம்பெற்ற ’தனிமையே’ என்ற அழகான மெலடி பாடல் வரும் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

மெலடி இசை மன்னர் டி.இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடி உள்ளதாகவும் மதன் கார்க்கி இந்த பாடலை எழுதி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்தப்பாடல் ஆர்யா-சாயிஷா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

முதல்முறையாக குட்டிக்கதையை பாடலாக பாடும் விஜய்!

தளபதி விஜய் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் ஒரு குட்டிக்கதை கூறுவதும் அந்த குட்டி கதை ஒரு வாரத்துக்கு டிரெண்டிங்கில் இருப்பதும் தெரிந்ததே.

மதமாற்ற விவகாரம்: விஜய்சேதுபதியை அடுத்து கொந்தளித்த பிக்பாஸ் நடிகை!

பிகில் படத்தில் நடித்த நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனைக்கு பின்னணியாக

பிரிவினை அரசியல் நடக்கிறது.. எனினும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்..! ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரிவினை அரசியல் நடக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் காட்டப்படுகிறார்கள் என் ஏ.ஆர். ரஹ்மான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியுள்ளார்.  

'மாஸ்டர்' சிங்கிள் பாடலை பாடியது யார்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டிக்கதை' என்ற பாடல் வரும்

ரூ.147 அதிகரித்தது கேஸ் சிலிண்டர் விலை.. இனி ரூ.881 கொடுத்து வாங்கனும்..!

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.